Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 18 , மு.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

லோதா செயற்குழுவின் நடவடிக்கைகள் குறித்து, சர்வதேச கிரிக்கெட் சபையிடம் கடிதம் கோரியமை குறித்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் அநுரக் தாக்கூர், பொய் கூறினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
லோதா செயற்குழுவின் நடவடிக்கைகள், கிரிக்கெட் சபைக்குள் அரசாங்கத் தலையீடு என்ற நிலையை ஏற்படுத்துமா என்பது தொடர்பில், சர்வதேச கிரிக்கெட் சபையிடம் விளக்கம் கோரியதாகவே, அநுரக் தாக்கூர், உச்சநீதிமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், சர்வதேச கிரிக்கெட் சபையின் தவிசாளர் ஷஷாங் மனோகரின் கருத்துப்படி, லோதா செயற்குழுவின் தலையீடு, அரசாங்கத் தலையீடாக அமையுமெனவும் அதனால் சர்வதேச கிரிக்கெட் சபையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்படும் ஆபத்து உள்ளது தெரிவிக்கும் கடிதத்தையே, தாக்கூர் கோரியுள்ளார். எனவே, உச்சநீதிமன்றத்தில், தாக்கூர் பொய் கூறினாரா என்பதே, தற்போதுள்ள கேள்வியாக உள்ளது.
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago