2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

பொய்யான வயதைப் பயன்படுத்துதல் ஃபிக்சிங் போன்றதாகும்

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனிஷ்ட வயதினருக்கான கிரிக்கெட் போட்டிகளில், வயதை மறைத்துப், பொய்யான வயதைப் பயன்படுத்தல், போட்டி நிர்ணயம் (பிக்சிங்), ஊழல் போன்றவற்றிலிருந்து வேறானவை அல்லவென, இந்திய அணியின் முன்னாள் தலைவர் ராகுல் ட்ராவிட் தெரிவித்துள்ளார்.

இந்திய முன்னாள் தலைவர் எம்.ஏ.கே பட்டோடி ஞாபகார்த்த வருடாந்த உரையில், இம்முறை உரையாற்றும்போதே ட்ராவிட், இவ்வாறு குறிப்பிட்டார்.

'தனது வயதை மறைந்து, போலி பிறப்புச் சான்றிமழைத் தனது பெற்றோரும் பயிற்றுநர்களும் தயாரிப்பதைப் பார்க்கும்  குழந்தையொன்று, எதிர்காலத்தில் ஏமாற்றுவதைப் பற்றி நினைக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?" என, ட்ராவிட் கேள்வியெழுப்பினார்.

'பொய் சொல்வதற்கு அவன், தனது பெரியோர்களாலேயே பயிற்றுவிக்கப்படுகிறான்" எனத் தெரிவித்த அவர், '14 வயதில் அது, வெறுமனே வயது எல்லையாக இருக்கலாம், 25 வயதில் அது போட்டி நிர்ணயம், ஊழலாக இருக்கலாம். இரண்டுமே, எந்த வகையில் வித்தியாசமானவை? இரண்டு இடங்களிலும், மோசமான ஏமாற்றுக்களில்லையா?" எனக் கேள்வியெழுப்பினார்.

வயது கூடிய வீரர்கள், குறைந்த வயதுடைய எல்லையில் விளையாடுவதால் போட்டிகளின் போட்டித்தன்மை பாதிக்கப்படுவதாகத் தெரிவித்த அவர், அதை விட முக்கியமானதாக, அந்த வயதுப் பிரிவுக்குரிய பொருத்தமான வீரர்கள், போட்டிகளில் விளையாட முடியாது போவதாகத் தெரிவித்தார்.

வயது அதிகமான வீரர்களை, குற்றமிழைத்தவர்களென அழைத்த அவர், அவர்களுக்கெதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .