Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
லா லிகா கால்பந்தாட்டத் தொடரில், நடப்புச் சம்பியன்களான பார்சிலோனா அணி, அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்துள்ளது. செல்ட்டா விகோ அணிக்கெதிரான போட்டியிலேயே அவ்வணி அதிர்ச்சித் தோல்வியடைந்தது.
ஆரம்பத்திலிருந்தே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய செல்ட்டா அணி, கோல் பெறும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டது. எனினும், அவ்வணியால் கோல்களைப் பெற்றுக் கொண்டிருக்கவில்லை.
போட்டியின் 26ஆவது நிமிடத்தில், பார்சிலோனாவின் முன்னாள் வீரரான நோலிட்டா, சிறப்பான கோலொன்றைப் பெற்று, செல்ட்டா அணிக்கு முன்னிலை வழங்க, நான்கே நிமிடங்களில், அவ்வணியின் இயாகோ அஸ்பஸ் கோலொன்றைப் பெற்றதோடு, 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய செல்ட்டா அணி, 56ஆவது நிமிடத்தில் இயாகோ அப்ஸஸ் தனது இரண்டாவது கோலைப் பெற்றுக் கொடுத்து, 3-0- என்ற முன்னிலையை வழங்கினார்.
போட்டியின் 80ஆவது நிமிடத்தில், மெஸ்ஸியின் உதவியோடு, நேய்மர் ஒரு கோலைப் பெற்றுக் கொடுத்து, பார்சிலோனாவின் கோல் எண்ணிக்கை ஆரம்பித்து வைத்த போதிலும், இரண்டே நிமிடங்களில் செல்ட்டா சார்பாக ஜோன் கய்டெட்டி கோலொன்றை அடித்து, 4-1 என்ற முன்னிலையை வழங்கியதோடு, அதுவே இறுதி கோல் நிலையாகவும் அமைந்து கொண்டது.
இதன்படி, இப்பருவகால லா லிகா போட்டிகளில் தோல்வியையே சந்திக்காதிருந்த பார்சிலோனா அணி, தனது முதலாவது தோல்வியைச் சந்தித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
லா லிகாவின் மற்றொரு போட்டியில், அத்லெட்டிக் பில்பாவோ அணியை எதிர்கொண்ட றியல் மட்ரிட் அணி, 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago