Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 26 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் அணித்தலைவர் அன்ரே இனியஸ்டா, பார்சிலோனாவுடனான தனது ஒப்பந்தம் 2018ஆம் ஆண்டு நிறைவடைந்த பின்னரும், நீண்ட காலத்துக்கு பார்சிலோனாவில் நீடிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
“2018ஆம் ஆண்டு எனது ஒப்பந்தம் முடிவடைகிறது, எனது விருப்பம் தொடர வேண்டுமென்பதே, முழு உலகமும் இதை அறியும். இதில் இரகசியம் ஒன்றுமில்லை. எனினும், நான் பார்சிலோனாவில் நீடிக்கலாமா என்பதை, எனது பெறுபேறு மட்டங்களே தீர்மானிக்கும். இது நீண்டகாலமாக இருக்கும் என நம்புகிறேன்” என 32 வயதான இனியஸ்டா தெரிவித்துள்ளார்.
தனது முன்னாள் சக வீரரான ஸ்கெவி ஹெர்ணான்டஸுக்கு அடுத்ததாக, பார்சிலோனா சார்பாக அதிக போட்டிகளில் விளையாடியுள்ள இனியஸ்டா, லியனல் மெஸ்ஸியுடன் இணைந்து, பார்சிலோனாவில் அதிக கிண்ணங்களை வென்றவராகக் காணப்பாடுகிறார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago