Gopikrishna Kanagalingam / 2015 செப்டெம்பர் 03 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2ஆம் சுற்றில், முதல்நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச், ஒஸ்திரியாவின் அன்ட்ரியாஸ் ஹெய்டர்-மௌரெரை 6-4, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றிகொண்டார். 8ஆம் நிலை வீரரான ரபேல் நடால், ஆர்ஜென்டினாவின் டியாகோ சுவர்ட்ஸ்மனை 7-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார். 10ஆம் நிலை வீரர் மிலோஸ் றாவோனிக், 18ஆம் நிலை வீரர் ‡பெலிசியானோ லோபஸ், 19ஆம் நிலை வீரர் ஜோ வில்-பிரட் சொங்கா ஆகியோரும் வெற்றிபெற்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2ஆம் சுற்றில், முதல்நிலை வீராங்கனையான செரினா வில்லியம்ஸ், நெதர்லாந்தின் கிகி பேர்ட்டென்ஸை 7-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார். 9ஆம் நிலை வீராங்கனையான மரின் சிலிச், 19ஆம் நிலை வீராங்கனை மடிசன் கீஸ், 23ஆம் நிலை வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோரும் வெற்றிபெற்றனர்.
ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில், முதல்நிலை ஜோடியும் 5 தடவை அமெரிக்க பகிரங்க இரட்டையர் பட்டம் வென்றவர்களுமான பிரையன் சகோதரர்கள் (பொப் பிரையன், மைக் பிரையன்), சக அமெரிக்க ஜோடியான ஸ்டீவன் ஜோன்சன், சாம் குவாரே ஜோடியிடம், 6-7, 7-5, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தனர்.
2ஆம் நிலை ஜோடியான குரோஷியாவின் இவன் டொடிக், பிரேசிலின் மார்செலோ மெலோ ஜோடி, பெரிய பிரித்தானியாவைச் சேர்ந்த டொமினிக் இன்ளொட், ஸ்வீடனைச் சேர்ந்த றொபேர்ட் லின்ட்ஸ்டெட்ற் ஜோடியிடம், 6-7, 7-5, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தனர்.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago