2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

பிராவோ வெளியேற்றம்; எச்சரிக்கையும் விடுப்பு

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 13 , பி.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபைத் தலைவர் டேவ் கமரோனுக்கு எதிராக, அவ்வணியின் கிரிக்கெட் வீரர் டெரன் பிராவோ வெளிப்படுத்திய கருத்துகளைத் தொடர்ந்து, சிம்பாப்வே முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரிலிருந்து, அவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

டெரன் பிராவோவின் திறமைகள் போதாமை காரணமாகவே, கிரிக்கெட் ஒப்பந்தத்தில் அவருக்கு மிகவும் குறைந்தபட்ச ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக, டேவ் கமரோன் தெரிவித்திருந்தார். அதற்கு டுவிட்டரில் பதிலளித்த பிராவோ, "கடந்த 4 ஆண்டுகளாக, நீங்கள் தோல்வியடைந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஏன் இராஜினாமா செய்யக்கூடாது? உங்கள் தகவலுக்காக: எனக்கு ஒப்பந்தமே வழங்கப்படவில்லை. பெரிய முட்டாள், டேவ் கமரோன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்தே, முத்தரப்புத் தொடரிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். அத்தோடு, சனிக்கிழமை மாலைக்கு முன்னர், அந்த டுவீட்டை அழித்துவிட்டு, மன்னிப்புக் கேட்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், நேற்று வரையிலும், அந்த டுவீட் அழிக்கப்பட்டிருக்கவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .