2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

பெல்ஜியன் கிரான்ட்பிரிக்ஸை கைப்பற்றினார் ஹமில்டன்

Shanmugan Murugavel   / 2015 ஓகஸ்ட் 24 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

போர்மியுலா 1 உலக சம்பியனான பிரித்தானியாவின் லூயிஸ் ஹமில்டன் பெல்ஜியன் கிரான்ட்பிரிக்ஸை வெற்றி கொண்டு, இன்னும் எட்டு பந்தயங்கள் மீதமிருக்கையில் தனது மேர்சிடஸ் அணி சக வீரரான நிக்கோ ரோஸ்பேர்க்குக்கும் தனக்குமிடையிலான புள்ளி வித்தியாசத்தை 28 ஆக அதிகரித்துக் கொண்டார்.

ஹமில்டன் ஒரு மணித்தியாலயம் 23 நிமிடம் 40 செக்கன்களில் பந்தயத்தூரத்தை கடந்து முதலாமிடத்தையும், அவரை விட இரண்டு செக்கன்கள் அதிகமாக எடுத்த ரோஸ்பேர்க் இரண்டாமிடத்தையும், 37 செக்கன்கள் அதிகமாக எடுத்த லோட்டஸ் அணியை சேர்ந்த பிரான்சின் ரொமைன் குரோசஜான் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

இதேவேளை பெராரி அணியின் 900மாவதும், தனது 150வது பந்தயத்தில் பங்கேற்ற செபஸ்டியான் விட்டல், இறுதிக்கு முதல் சுற்றில் தனது காரின் வலது டயரில் ஏற்பட்ட ஓட்டை காரணமாக பந்தயத்திலிருந்து விலகியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .