2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

போலினால் பங்களாதேஷை வென்றது இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 07 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில், மிர்பூரில் இன்று இடம்பெற்ற முதலாவது போட்டியில், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், இங்கிலாந்து அறிமுகத்தை மேற்கொண்ட வேகப்பந்து வீச்சாளர் ஜேக் போலினால், பங்களாதேஷை, இங்கிலாந்து வென்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணித்தலைவர் ஜொஸ் பட்லர், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 309 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் முதலாவது சதத்தைப் பெற்ற பென் ஸ்டோக்ஸ் 101(100), ஜொஸ் பட்லர் 63(38), இங்கிலாந்து சார்பாக அறிமுகத்தை மேற்கொண் பென் டக்கெட் 60(78), ஜேஸன் றோய் 41(40) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அணித்தலைவர் மஷ்ரபி மோட்டார்சா, ஷகிப் அல் ஹசன், ஷபிகுல் இஸ்லாம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு 310 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 41.2 ஓவர்களில், நான்கு விக்கெட்டுகளை இழந்து 270 ஓட்டங்களைப் பெற்று, 52 பந்துகளில் 39 ஓட்டங்களையே பெற வேண்டி இருந்தபோதும், அடுத்த 39 பந்துகளில், 17 ஓட்டங்களுக்கு, இறுதி ஆறு விக்கெட்டுகளையும் இழந்து, 21 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில், இம்ரல் கைஸ் 112(119), ஷகிப் அல் ஹசன்  79(55) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஜேக் போல் ஐந்து, அடில் ரஷீட் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக ஜேக் போல் தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .