Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பகலிரவு டெஸ்ட் போட்டிகளுக்கு எதிர்ப்பானவராகவே தான் காணப்படுவதாக, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் றிக்கி பொன்டிங் தெரிவித்துள்ளார்.
உலகின் முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டி, அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் எதிர்வரும் நவம்பரில் இடம்பெறவுள்ள நிலையிலேயே, அது தொடர்பான கருத்துக்களை றிக்கி பொன்டிங் வெளிப்படுத்தியுள்ளார்.
பரிட்சார்த்தமாக இடம்பெறவுள்ள இந்த வகைப் போட்டிகளும் பயன்படுத்தப்படவுள்ள மென்சிவப்புப் பந்துகளும், அதிகமான கவனத்தை ஈர்ப்பதோடு, வீரர்களது அதிகமான கூர்ந்தாய்வுக்கும் உட்பட வேண்டியிருக்கும் எனத் தெரிவித்தார்.
பகலிரவு டெஸ்ட் போட்டிகளுக்கு, தான் நீண்டகாலமாகமே எதிர்ப்புத் தெரிவித்து வந்ததாகத் தெரிவித்த அவர், புத்தாக்க முயற்சிகளுக்கும் வித்தியாசமாக இருக்க வேண்டுமென்பதற்குமான காரணங்களைப் புரிந்து கொள்வதாகவும், ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் என்பது வரலாறும் பாரம்பரியமாகவுமே காணப்படுவதாகத் தெரிவித்தார்.
தன்னைப் பொறுத்தவரை, பகல் போட்டிகளாக இடம்பெறும் போதே, துடுப்பாட்டத்துக்கும் பந்துவீச்சுக்குமிடையில் சமநிலையான போட்டியை வழங்குமென எண்ணுவதாகவும், பகலிரவுப் போட்டிகளாக இடம்பெறும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளும் இருபதுக்கு-20 போட்டிகளும், களிப்பு நோக்கங்களுக்காகக் காணப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும், முன்னோக்கிச் செல்வதற்கான நேரமிதுவென எண்ணுவதாகத் தெரிவித்த அவர், இது குறித்து வீரர்கள் என்ன நினைக்கிறார்கள் எனவும் பகலிரவுப் போட்டிகளை அவர்கள் எந்தளவுக்கு விரும்புகிறார்கள் என்பதிலும் இவ்வகைப் போட்டிகளின் வெற்றிகரத்தன்மை காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago