2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

பக்கியோ தோல்வி; சம்பியனானார் ஹோர்ண்

Editorial   / 2017 ஜூலை 04 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக குத்துச்சண்டை அமைப்பின், 63.5 தொடக்கம் 66.7 கிலோகிராம் வரையிலான எடைப் பிரிவுக்கான சம்பியன் போட்டியில், உலகச் சம்பியன் மனி பக்கியோவை வீழ்த்திய ஜெப் ஹோர்ண், அதிர்ச்சி வெற்றிபெற்றார்.

பிறிஸ்பேணில் இடம்பெற்ற இப்போட்டியில், 29 வயதான, முன்னாள் பாடசாலை ஆசிரியரான ஹோர்ண், ஆக்ரோஷமான விளையாட்டை வெளிப்படுத்தி, 117-111, 115-113, 115-133 என்ற புள்ளிகள் கணக்கில், 12 சுற்றுகளின் பின்னர் வெற்றிபெற்றார்.

38 வயதான பக்கியோ, தனது காலத்தில் தோன்றிய மிகச்சிறந்த வீரர்களுள் ஒருவராகக் கருதப்படுவதோடு, அவர் குறுகிய நேரத்தில் வெற்றிபெற்று விடுவார் என, அவரது அணியினரே தெரிவித்திருந்தனர். இந்நிலையிலேயே அவர் அதிர்ச்சிகரமாகத் தோல்வியடைந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .