2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

பங்களாதேஷின் பிரதம தேர்வாளர் நியமனம்

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 23 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் தேசிய கிரிக்கெட் அணியின் பிரதம தேர்வாளராக, மின்ஹாஜுல் அபேடின் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் காணப்பட்ட பாரூக் அஹ்மட், அப்பதவியிலிருந்து விலகியமையைத் தொடர்ந்தே, புதிய பிரதம தேர்வாளராக, அபேடின் நியமிக்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தேர்வு தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களையடுத்து, பிரதம தேர்வாளர் பதவியிலிருந்து பாரூக் அஹமட் விலகியிருந்தார். பாரூக் அஹமட்டின் கீழ் தேர்வாளராகச் செயற்பட்டு வந்த அபேடின், 2011ஆம் ஆண்டு அப்பதவியில் காணப்பட்டார். அத்தோடு, பிரதம தேர்வாளரின் பதவி விலகலால் ஏற்பட்ட இடைவெளிக்காக, முன்னாள் தலைவரான ஹபிபுல் பஷார் நியமிக்கப்பட்டார். புதிய மாற்றங்களின் போது, பெண்கள் கிரிக்கெட்டின் தேர்வாளராக பஷார் நியமிக்கப்பட்டிருந்தார்.

ஏனைய தேர்வாளர்களாக சஜாட் அஹ்மட், பயிற்றுநர் சந்திக்க ஹத்துருசிங்க, அணி முகாமையாளரும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபைப் பணிப்பாளர்களில் ஒருவருமான காலீட் மஹ்மூட், கிரிக்கெட் நடவடிக்கைச் செயற்குழுத் தலைவர் அக்ரம் கான் ஆகியோர் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .