2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பங்களாதேஷுக்கெதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் இந்தியா

Shanmugan Murugavel   / 2024 செப்டெம்பர் 20 , மு.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான முதலாவது டெஸ்டின் நேற்றைய முதல் நாள் முடிவில் முன்னிலையில் இந்தியா காணப்படுகின்றது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், சென்னையில் நேற்று ஆரம்பித்த இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பங்களாதேஷின் அணித்தலைவர் நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமெனத் தெரிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா ஆரம்பத்திலேயே அணித்தலைவர் றோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், விராட் கோலியை ஹஸன் மஹ்மூட்டிடம் இழந்து தடுமாறியது.

பின்னர் இணைந்த யஷஸ்வி ஜைஸ்வாலும், றிஷப் பண்டும் இனிங்ஸை நகர்த்திய நிலையில், 39 ஓட்டங்களுடன் மஹ்மூட்டிடம் பண்ட் வீழ்ந்தார். தொடர்ந்து லோகேஷ் ராகுலும், ஜைஸ்வாலும் ஓட்டங்களைச் சேகரித்த நிலையில் அடுத்தடுத்த ஓவர்களில் நஹிட் ரானாவிடம் 56 ஓட்டங்களுடன் ஜைஸ்வாலும், மெஹிடி ஹஸன் மிராஸிடம் ராகுலும் வீழ்ந்தனர்.

இந்நிலையில் ஜோடி சேர்ந்த இரவீந்திர ஜடேஜாவும், இரவிச்சந்திரன் அஷ்வினும் ஓட்டங்களைக் குவித்த நிலையில் நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 339 ஓட்டங்களை தமது முதலாவது இனிங்ஸில் இந்தியா பெற்றுள்ளது. களத்தில் அஷ்வின் 102 ஓட்டங்களுடனும், ஜடேஜா 86 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X