2025 மே 19, திங்கட்கிழமை

பங்களாதேஷை வீழ்த்திய தென்னாபிரிக்கா

Shanmugan Murugavel   / 2022 மார்ச் 21 , பி.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியை தென்னாபிரிக்கா வென்றுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், ஜொஹன்னஸ்பேர்க்கில் நேற்று நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பங்களாதேஷின் அணித்தலைவர் தமிம் இக்பால், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், ககிஸோ றபாடாவிடம் 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில், அஃபிஃப் ஹொஸைன் 72 (107), மெஹிடி ஹஸன் மிராஸ் 38 (49) ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.

பதிலுக்கு, 195 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, குயின்டன் டி கொக்கின் 62 (41), கைல் வெரைன்னேயின் ஆட்டமிழக்காத 58 (77) ஓட்டங்களோடு 37.2 ஓவர்களில் வெற்றியிலக்கையடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக றபாடா தெரிவானார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X