2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

பதவி விலகுவது எனது முடிவு

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 07 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க அணித்தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவு, தனது சொந்த முடிவு என, தென்னாபிரிக்க டெஸ்ட் அணித்தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ள ஹஷிம் அம்லா தெரிவித்துள்ளார். அத்தோடு, தனது அணித்தலைமையை எப்போதும் மகிழ்வாகக் கருதியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரராக இருந்த போதிலும், ஹஷிம் அம்லாவின் தலைமைத்துவப் பண்புகள் தொடர்பாக, சந்தேகங்கள் தொடர்ந்தும் காணப்பட்டன. அதிலும், அண்மைக்காலமாக ஓட்டங்களைப் பெறுவதற்கு அவர் தடுமாறி வந்த நிலையில், தலைமைத்துவம் தொடர்பாக கேள்விகள் அதிகரித்திருந்தன.

ஆனால், இங்கிலாந்துக்கெதிரான 2ஆவது போட்டியில் இரட்டைச்சதம் பெற்று, துடுப்பாட்ட வீரராகத் தனது அழுத்தங்களைக் குறைத்துக் கொண்ட அம்லா, அப்போட்டியின் முடிவில், எதிர்பாராத விதமாக விலகினாhர்.

கிறேம் ஸ்மித் பதவி விலகிய போது, அணித்தலைமையைப் பரீட்சிப்பதற்கான வாய்ப்புக் கிடைத்தது எனத் தெரிவித்த அவர், அணிக்கான பங்களிப்பொன்றைத் தன்னால் வழங்க முடியுமென அப்போது எண்ணியதாகக் குறிப்பிட்டார். அத்தோடு, பெறுமதியொன்றை அணிக்கு வழங்கியதாக, எண்ண விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தன்னை விட இன்னொருவர், சிறப்பான பணியை ஆற்ற முடியுமென்ற நம்பிக்கையின் காரணமாக பதவி விலகுவதாகக் குறிப்பிட்ட அவர், இளைய அணியொன்றைக் கொண்டிருப்பதன் காரணமாக, இன்னொருவரால் சிறப்பான பணியை ஆற்றியிருக்க முடியுமென எண்ணியதாகவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளுக்குமான தலைவராக ஏபி டி வில்லியர்ஸ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நிரந்தரத் தலைவராகவும் அவரே நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .