2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பத்தாண்டுகளில் சிறந்த வீரர் பட்டியலில் சங்கா

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 26 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சர்வதேச கிரிக்கெட் சபையின் பத்தாண்டுகளில் சிறந்த வீரர்கள் விருதுக்கு இலங்கையணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, தென்னாபிரிக்காவின் முன்னாள் தலைவர் ஏ.பி டி வில்லியர்ஸ், இந்திய அணித்தலைவர் விராட் கோலி உள்ளிட்டோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இப்பட்டியலில், நியூசிலாந்தின் அணித்தலைவர் கேன் வில்லியம்ஸன், அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்தின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணித்தலைவர் ஜோ றூட், இந்தியாவின் இரவிச்சந்திரன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், பத்தாண்டுகளில் சிறந்த டெஸ்ட் வீரருக்கான பட்டியலில் கோலி, வில்லியம்ஸன், ஸ்மித் ஆகியோருடன் இலங்கையின் முன்னாள் வீரர் ரங்கன ஹேரத், இங்கிலாந்தின் ஜேம்ஸ் அன்டர்சன், பாகிஸ்தானின் யசீர் ஷா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

பத்தாண்டுகளில் சிறந்த ஒருநாள் சர்வதேசப் போட்டி வீரருக்கான பட்டியலில் கோலி, சங்கக்கார, டி வில்லியர்ஸுடன் இலங்கையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவர் லசித் மலிங்க, அவுஸ்திரேலியாவின் மிற்செல் ஸ்டார்க், இந்தியாவின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோணி, ரோஹித் ஷர்மா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான சிறந்த வீரர் பட்டியலில் கோலி, மலிங்க, ரோஹித்துடன், அவுஸ்திரேலியாவின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான அணித்தலைவர் ஆரோன் பின்ஞ், மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் தலைவர் கிறிஸ் கெய்ல், ஆப்கானிஸ்தானின் ரஷீட் கான், தென்னாபிரிக்காவின் இம்ரான் தாஹீர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X