2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

பந்துவீச்சாளர் தரப்படுத்தல்: 2ஆம் இடத்தில் ஹேரத்

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 14 , பி.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரப்படுத்தலில், இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர் ரங்கன ஹேரத், 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முடிவைத் தொடர்ந்து, நேற்று வெளியிடப்பட்ட தரப்படுத்தலிலேயே, இரண்டாவது இடத்துக்கு அவர் முன்னேறியுள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த சிம்பாப்வே அணிக்கெதிரான தொடருக்குத் தலைமை தாங்கியிருந்த ஹேரத், 2 போட்டிகளில், 19 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். இதைத் தொடர்ந்தே, தரப்படுத்தல் புள்ளிகளாக 867 புள்ளிகளைப் பெற்றுள்ள அவர், 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவர் பெற்ற 867 புள்ளிகள், கிரிக்கெட் வாழ்வில் அவர் பெற்ற அதிகபட்சப் புள்ளிகளாகும். இதைத் தவிர, முத்தையா முரளிதரன் அல்லாத இலங்கையரொருவர் பெற்ற அதிகபட்ச தரப்படுத்தல் புள்ளிகளாகும்.

பந்துவீச்சாளர்களில் முதல் 10 இடங்களை இரவிச்சந்திரன் அஷ்வின், ரங்கன ஹேரத், டேல் ஸ்டெய்ன், ஜேம்ஸ் அன்டர்சன், யாசீர் ஷா, ஸ்டுவேர்ட் ப்ரோட், இரவீந்திர ஜடேஜா, மிற்சல் ஸ்டார்க், ஜொஷ் ஹேஸல்வூட், நீல் வக்னர் ஆகியோர் பெற்றுள்ளனர்.

இந்தியாவுக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாகப் பிரகாசித்த இங்கிலாந்தின் ஜோ றூட், துடுப்பாட்ட வீரர்களின் தரப்படுத்தலில் இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளார். துடுப்பாட்ட வீரர்களில் ஸ்டீவன் ஸ்மித், ஜோ றூட், கேன் வில்லியம்ஸன், யுனிஸ் கான், ஹஷிம் அம்லா, ஏபி டி வில்லியர்ஸ், டேவிட் வோணர், அடம் வோஜஸ், அஜின்கியா ரஹானே, அலஸ்டெயர் குக் ஆகியோர் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .