Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 09 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க பெண்கள் அணிக்கும் நியூசிலாந்து பெண்கள் அணிக்குமிடையிலான 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில், இறுதி நேரத்தில் அதிகமான விக்கெட்டுகளை இழந்த தென்னாபிரிக்க அணி, பரிதாபமாகத் தோற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நியூசிலாந்து அணி, 40.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 127 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. துடுப்பாட்டத்தில் எரின் பேர்மிங்காம் 33 (53), சாம் கேர்ட்டிஸ் 22 (39) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் அயாபொங்கா காக்கா 3 விக்கெட்டுகளையும் மரிஷன்னே கப், மொசெலின் டானியல்ஸ் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
128 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 42.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 115 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுத் தோல்வியடைந்தது. ஒரு கட்டத்தில், 5 விக்கெட்டுகளை இழந்து 115 ஓட்டங்களுடன், வெற்றியை நோக்கி இலகுவாகப் பயணித்துக் கொண்டிருந்த அவ்வணி, இறுதி 5 விக்கெட்டுகளையும், மேலதிக ஓட்டமெதனையும் பெறாது இழந்து, தோல்வியடைந்திருந்தது.
துடுப்பாட்டத்தில் டேன் வான் நிகேர்க் 37 (79), லாரா வொல்வார்ட் 33 (78), சோல் ட்ரையோன் 21 (34) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் அமி சட்டர்த்வைட் 4 விக்கெட்டுகளையும் லீ துஹுஹு 3 விக்கெட்டுகளையும் எரின் பேர்மிங்காம் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
போட்டியின் நாயகியாக, சட்டர்த்வைட் தெரிவானார்.
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago