2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பரிஸ் ஸா ஜெர்மனை வீழ்த்தி காலிறுதியில் றியல் மட்ரிட்

Shanmugan Murugavel   / 2022 மார்ச் 12 , மு.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு, ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட் தகுதி பெற்றுள்ளது.

தமது மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனுடனான இரண்டாவது சுற்று இறுதி 16 அணிகளுக்கிடையிலான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்றமையைத் தொடர்ந்தே ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் இத்தொடரின் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

றியல் மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட மூன்று கோல்களையும் கரிம் பென்ஸீமா பெற்றிருந்த நிலையில், பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாகப் பெறப்பட்ட கோலை கிலியான் மப்பே பெற்றிருந்தார்.

பரிஸ் ஸா ஜெர்மைனின் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்று இறுதி 16 அணிகளுக்கிடையிலான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் அவ்வணி வென்ற நிலையில், 3-2 என்ற மொத்த கோல் கணக்கிலேயே காலிறுதிப் போட்டிக்கு றியல் மட்ரிட் தகுதி பெற்றிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .