Shanmugan Murugavel / 2023 ஏப்ரல் 27 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது, ராவல்பின்டியில் இன்று பிற்பகல் 4 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
கேன் வில்லியம்ஸன், கிளென் பிலிப்ஸ், டெவோன் கொன்வே, மிற்செல் சான்ட்னெர் ஆகியோர் இல்லாத நிலையில், பதிலணித்தலைவர் டொம் லேதம், டரைல் மிற்செல், மற் ஹென்றி ஆகியோரின் பங்களிப்பு முக்கியமானதாகக் காணப்படுவதுடன், இருபதுக்கு – 20 தொடரில் பிரகாசித்த மார்க் சப்மன், றஷின் றவீந்திராவின் பங்களிப்பும் நியூசிலாந்துக்கு பலமானதாகக் காணப்படும்.
பாகிஸ்தானைப் பொறுத்த வரையில் அணித்தலைவர் பாபர் அஸாம், பக்கர் ஸமன் ஆகியோரின் பங்களிப்புகளே முக்கியமானதாகக் காணப்படுவதோடு, ஷகீன் ஷா அஃப்ரிடி, ஹரிஸ் றாப், நசீம் ஷாவின் பந்துவீச்சு விக்கெட்டுகளைக் கைப்பற்றக்கூடிய வகையில் காணப்படுகிறது.
53 minute ago
9 hours ago
17 Apr 2026
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
9 hours ago
17 Apr 2026
17 Apr 2026