Shanmugan Murugavel / 2021 நவம்பர் 11 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் டுபாயில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானும் அவுஸ்திரேலியாவும் மோதவுள்ளன.
இத்தொடரில் எதுவித தோல்வியைத் தளுவியிருக்காமல் கிட்டத் தட்ட அனைத்து வீரர்களின் பங்களிப்புடன் காணப்படும் பாகிஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்குச் செல்வதற்கு அவுஸ்திரேலியாவும் கூட்டிணைவாக சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்த வேண்டியுள்ளது.
பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் அனைத்து இடங்களும் சிறப்பாக உள்ளபோதும் பக்கர் ஸமன் ஓட்டங்களைப் பெறாமையே பிரச்சினைக்குரிய ஒரு விடயமாக உள்ளது.
எதிர்பார்க்கப்படும் அவுஸ்திரேலிய அணி: 1. டேவிட் வோணர், 2. ஆரோன் பின்ஞ் (அணித்தலைவர்), 3. மிற்செல் மார்ஷ், 4. ஸ்டீவ் ஸ்மித், 5. கிளென் மக்ஸ்வெல், 6. மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், 7. மத்தியூ வேட் (விக்கெட் காப்பாளர்), 8. பற் கமின்ஸ், 9. மிற்செல் ஸ்டார்க், 10. அடம் ஸாம்பா, 11. ஜொஷ் ஹேசில்வூட்.
எதிர்பார்க்கப்படும் பாகிஸ்தான் அணி: 1. பாபர் அஸாம் (அணித்தலைவர்), 2. மொஹமட் றிஸ்வான் (விக்கெட் காப்பாளர்), 3. பக்கர் ஸமன், 4. மொஹமட் ஹபீஸ், 5. ஷொய்ப் மலிக், 6. ஆசிப் அலி, 7. இமாட் வசீம், 8. ஷடாப் கான், 9. ஹஸன் அலி, 10. ஹரிஸ் றாஃப், 11. ஷகீன் ஷா அப்ரிடி.
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago