2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பாகிஸ்தான் சுப்பர் லீக்: இறுதிப் போட்டியில் லாகூர் குவாலான்டர்ஸ்

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 16 , மு.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தானின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் இறுதிப் போட்டிக்கு லாகூர் குவாலன்டர்ஸ் தகுதிபெற்றுள்ளது.

கராச்சியில் நேற்றிரவு நடைபெற்ற இரண்டாவது வெளியேற்றப் போட்டியில் முல்தான் சுல்தான்ஸை வென்றே லாகூர் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட லாகூர், தமிம் இக்பாலின் 30 (20), பக்கர் ஸமனின் 46 (36) ஓட்டங்களின் மூலம் வேகமான ஆரம்பத்தைப் பெற்றபோதும் பின்னர் கட்டுக்கோப்பாக பந்துவீசிய ஷகிட் அஃப்ரிடி (2), இம்ரான் தாஹீர் உள்ளிட்டோரிடம் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் டேவிட் விஸேயின் ஆட்டமிழக்காத 48 (21), சமித் பட்டேலின் 26 (16) ஓட்டங்களுடன் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு, 183 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய முல்தான், அடம் லைத்தின் 50 (29) ஓட்டங்கள் மூலம் விரைவான ஆரம்பத்தைப் பெற்றதுடன், குஷ்டில் ஷா 30 (19) ஓட்டங்களைப் பெற்றபோதும், டேவிட் விஸே (3), ஹரிஸ் றாஃப் (3), டில்பார் ஹுஸன் (2), ஷகீன் ஷா அஃப்ரிடியிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 19.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 157 ஓட்டங்களையே பெற்று 25 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X