Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2020 நவம்பர் 18 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் சம்பியனாகியது.
கராச்சியில் நேற்றிரவு நடைபெற்ற லாகூர் குவாலான்டர்ஸுடனான இறுதிப் போட்டியில் வென்றதன் மூலமே கராச்சி சம்பியனாகியது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லாகூர் சார்பாக ஆரம்பத் துடுப்பாட்டவீரர்கள் தமிம் இக்பால் 35 (38), பக்கர் ஸமன் 27 (24) ஓட்டங்களைப் பெற்றபோதும், கட்டுக்கோப்பாக பந்துவீசி விக்கெட்டுகளைக் கைப்பற்றிய உமைட் ஆசிஃப் (2), இமாட் வசீம் (1), அர்ஷாட் இக்பால் (2), வக்காஸ் மக்ஸ்கூட்டிடம் (2) விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ஓட்டங்களையே லாகூர் பெற்றது.
பதிலுக்கு, 135 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கராச்சி, பாபர் அஸாமின் ஆட்டமிழக்காத 63 (49) ஓட்டங்களுடன் 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக, தொடரின் நாயகனாக பாபர் அஸாம் தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .