Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2024 ஒக்டோபர் 08 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், பியொரென்டீனாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் ஏ.சி மிலன் தோற்றது.
மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை கிறிஸ்டியன் புலிசிச் பெற்றதோடு, பியொரென்டீனா சார்பாக யசின் அடில், அல்பேர்ட் குமுன்ட்சன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில் மொன்ஸாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் றோமா சமப்படுத்தியது. றோமா சார்பாகப் பெறப்பட்ட கோலை அர்டெம் டொவ்பிக் பெற்றதோடு, மொன்ஸா சார்பாகப் பெறப்பட்ட கோலை டனி மோட்டா பெற்றார்.
இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற கைகரியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் சமப்படுத்தியது. ஜுவென்டஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை டுஸன் விளாகோவிச் பெற்றதோடு, கைகரி சார்பாகப் பெறப்பட்ட கோலை றஸ்வன் மரின் பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .