Shanmugan Murugavel / 2021 ஜூலை 19 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானிய குரான் பிறீயை நடப்புச் போர்மியுலா வண் சம்பியனான லூயிஸ் ஹமில்டன் வென்றுள்ளார்.
இன்று இடம்பெற்ற குறித்த பந்தயத்தை இரண்டாமிடத்திலிருந்து ஆரம்பித்த மெர்சிடீஸ் அணியின் ஹமில்டன், 10 செக்கன்கள் தண்டத்தைப் பெற்றபோதும் வென்றிருந்தார்.
றெட் புல் அணியின் மக்ஸ் வெர்ஸ்டப்பனோடு முதலாவது சுற்றில் மோதியமை காரணமாகவே இத்தண்டத்தை பிரித்தானியாவின் ஹமில்டன் பெற்றிருந்தார்.
எவ்வாறெனினும், பந்தயம் முடிவடைய இரண்டு சுற்றுக்கள் இருக்கையில் பெராரி அணியின் சார்ள்ஸ் லெக்கலெர்க்கை முந்தி முதலாமிடத்தை ஹமில்டன் பெற்றிருந்தார்.
பந்தயத்தை நான்காமிடத்திலிருந்து ஆரம்பித்த மொனாக்கோவின் லெக்கலெர்க் இரண்டாமிடத்தைப் பெற்றதோடு, ஹமில்டனின் சக மெர்சிடீஸ் அணியின் ஓட்டுநரான வல்ட்டேரி போத்தாஸ் மூன்றாமிடத்தைப் பெற்றிருந்தார்.
அந்தவகையில், போர்மியுலா வண் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 185 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நெதர்லாந்தின் வெர்ஸ்டப்பன் காணப்படுகின்றார். 177 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஹமில்டனும், 113 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் மக்கலெரென் அணியின் லான்டோ நோரிஸ்ஸூம் காணப்படுகின்றனர்.
36 minute ago
45 minute ago
49 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
45 minute ago
49 minute ago
59 minute ago