Shanmugan Murugavel / 2025 நவம்பர் 11 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலிய குரான் பிறீயை மக்லரென் அணியின் லான்டோ நொரிஸ் வென்றார்.
ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற பந்தயத்தை முதலாமிடத்திலிருந்து ஆரம்பித்து பிரித்தானியாவின் நொரிஸ் வென்ற நிலையில், இரண்டாமிடத்திலிருந்து ஆரம்பித்த மெர்சிடீஸ் அணியின் கிமி அன்டொனெல்லி இரண்டாமிடத்தைப் பெற்றதோடு, பின்வரிசையிலிருந்து ஆரம்பித்த நடப்பு போர்மியுலா வண் சம்பியனான மக்ஸ் வெர்ஸ்டப்பன் மூன்றாமிடத்தைப் பெற்றார்.
அந்தவகையில் இவ்வாண்டுக்கான சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 390 புள்ளிகளுடன் நொரிஸ் முதலாமிடத்தில் காணப்படுகின்றார். நொரிஸின் சக மக்லரென் அணி ஓட்டுநரான ஒஸ்கார் பியாஸ்திரி 366 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் காணப்படுவதோடு, றெட் புல் அணியின் வெர்ஸ்டப்பன் 341 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் காணப்படுகின்றார்.
28 minute ago
44 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
44 minute ago
1 hours ago
2 hours ago