Editorial / 2018 மார்ச் 13 , பி.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், ஸ்டோக் சிற்றி அணியின் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று காலை இடம்பெற்ற போட்டியில் ஸ்டோக் சிற்றியை மன்செஸ்டர் சிற்றி வென்றது.
இப்போட்டியின் 10ஆவது நிமிடத்தில் ரஹீம் ஸ்டேர்லிங்கிடமிருந்து வந்த பந்தை டேவிட் சில்வா கோலாக்க முன்னிலை பெற்ற மன்செஸ்டர் சிற்றி, 50ஆவது நிமிடத்தில் டேவிட் சில்வா பெற்ற இரண்டாவது கோலோடு போட்டி முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
அந்தவகையில், இப்போட்டியின் முடிவில், இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 81 புள்ளிகளைப் பெற்றுள்ள மன்செஸ்டர் சிற்றிக்கு இன்னும் எட்டுப் போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றாலே இங்கிலாந்து பிறீமியர் லீக் பட்டத்தைக் கைப்பற்றும் வாய்ப்புக் காணப்படுகிறது.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago