Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 செப்டெம்பர் 20 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 149 ஓட்டங்களை சேர்த்துள்ளது வங்கதேச அணி. இதன் மூலம் இந்தியா 227 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.
முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 339 ஓட்டங்களைச் சேர்த்தது. அஸ்வின் 102 ஓட்டகளுடனும், ரவீந்திர ஜடேஜா 86 ஓட்டங்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஜடேஜா 86 ஓட்டங்களில் அவுட்டாகி கிளம்பினார். அடுத்து வந்த ஆகாஷ் தீப் 17 ஓட்டங்களிலும், சிறப்பாக விளையாடிய அஸ்வின் 113 ஓட்டங்களிலும், பும்ரா 7 ஓட்டங்களிலும் விக்கெட்டாக இந்திய அணி 376 ஓட்டங்களைச் சேர்த்தது.
அடுத்து களமிறங்கிய வங்கதேச அணியின் ஓப்பனர் ஷத்மான் இஸ்லாம் 2 ஓட்டங்களில் போல்டானார். அடுத்து ஜாகிர் ஹசன் 3 ஓட்டங்களிலும், மொமினுல் ஹக் டக் அவுட்டாக திணறிக்கொண்டிருந்தது வங்கதேசம். நஜ்முல் ஹொசைன் 20 ஓட்டங்களிலும், முஷ்பிகுர் ரஹீம் 8 ஓட்டங்களிலும், லிட்டன் தாஸ் 22 ஓட்டங்களிலும், ஷகிப் அல் ஹசன் 32 ஓட்டங்களிலும் விக்கெட்டாக 100 ஓட்டங்களில் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது வங்கதேசம்.
இருப்பினும் தொடர்ந்து ஹசன் மஹ்மூத் 9 , தஸ்கின் அகமது 11, நஹித் ராணா 11 ஓட்டங்களில் அவுட்டாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 149 ஓட்டங்களை மட்டுமே சேர்த்தது வங்கதேச அணி. இதன் மூலம் இந்திய அணி 227 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. இதில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், சிராஜ், ஆகாஷ் தீப், ஜடேஜா, ஆகியோல் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து தொடங்கிய இரண்டாவது இன்னிங்ஸில் ரோகித் சர்மா 5 ஓட்டங்களுக்கு அவுட்டானார். தொடர்ந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால்10 ஓட்டங்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். 15 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 58 ஓட்டங்களை சேர்த்துள்ளது இந்திய அணி. விராட் கோலி, ஷுப்மன் கில் களத்தில் விளையாடி வருகின்றனர்.
19 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
52 minute ago