Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2024 செப்டெம்பர் 17 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
புறக்கோட்டை சமூக பொலிஸ் பிரிவும், புறக்கோட்டைமுதலாம் குறுக்குத் தெரு சுய தொழிலாளர்கள் சங்கமும் இணைந்து மூன்றாவது தடவையாகவும் நடத்திய எல்.டபிள்யூ.பெரேரா ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் கிண்ணத்தை 28 ஓட்டங்களால் ரீமாஸ் அணி தன் வசப்படுத்தியது.
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை சந்திரா சில்வா மைதானத்தில் திங்கட்கிழமை (16) நடைபெற்ற 12 அணிகள் பங்குபற்றிய இத் தொடரின் இறுதிப் போட்டிக்கு ரீமாஸ் மற்றும் பிரின்ஸ் சேலஞ்சர்ஸ் அணிகள் தகுதி பெற்றன.
மின் ஒளியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பிரின்ஸ் செலஞ்சர்ஸ் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்ததுடன் போட்டியின் ஆரம்பம் முதலே அதிரடியாக ஓட்டங்களை குவித்த ரீமாஸ் அணி மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 53 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் எம்.சப்ராஸ் 19 ஓட்டங்களையும் டபிள்யூ.டி.தனுஷ்க 17 ஓட்டங்களையும் பெற்றனர். பிரின்ஸ் செலஞ்சர்ஸ் பந்துவீச்சில் என். லசன்த் 9 ஒட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
54 இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பிரின்ஸ் செலஞ்சர்ஸ் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 25 ஓட்டங்களை குவித்து 28 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
ஐக்கிய தேசிய சுய தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரதீப் சார்ள்ஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட நிகழ்வில் சம்பியன் கிண்ணத்தை வென்ற அணிக்கு எல்.டபிள்யூ.பெரேரா ஞாபகார்த்த கிண்ணமும் ஏனைய பரிசுகளும் இரண்டாம் இடத்தைப் பெற்ற அணிக்கு கிண்ணமும் ஏனைய பரிசுகளும் வழங்கப்பட்டன.
இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக ரீமாஸ் அணியின் எம்.சப்ராஸ் தெரிவானார். தொடரின் சிறந்த பந்து வீச்சாளர் மற்றும் தொடரின் சிறந்த வீரர் ஆகிய இரண்டு விருதுகளையும் டபிள்யூ.டி தனுஷ்க தன்வசப்படுத்தினார். பிரின்ஸ் சேலஞ்சர்ஸ் அணியின் என்.லசந்த் தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரர் ஆனார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
03 May 2025
03 May 2025