2024 மே 14, செவ்வாய்க்கிழமை

பொரெஸ்டிடம் தோற்ற யுனைட்டெட்

Mayu   / 2024 ஜனவரி 01 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நொட்டிங்ஹாம்
பொரெஸ்டின் மைதானத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில்
1-2 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் தோற்றது.

யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்க்கஸ் றஷ்ஃபோர்ட் பெற்றார். பொரெஸ்ட்
சார்பாக நிக்கலஸ் டொமின்குயெஸ், மோர்கன் கிப்ஸ்-வைட் ஆகியோர் தலா ஒவ்வொருகோலைப் பெற்றனர்.

இந்நிலையில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நடைபெற்ற
அவ்வணியுடனான போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் எவெர்ற்றன் தோற்றது.

பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 42 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் காணப்படுகின்றது.

அஸ்டன் வில்லாவும் 42 புள்ளிகளுடன் உள்ளபோதும் கோலெண்ணிக்கை வித்தியாசத்தில்
இரண்டாமிடத்தில் காணப்படுகின்றது.

40 புள்ளிகளுடன் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றியும், ஆர்சனலும் காணப்படுகின்ற போதும் கோலெண்ணிக்கை வித்தியாசத்தில் மூன்றாம்,

நான்காமிடங்களில் முறையே காணப்படுகின்றன. இதில் வில்லா ஒரு போட்டியில் அதிகமாக
விளையாடியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X