Shanmugan Murugavel / 2025 ஜனவரி 22 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், இத்தாலிய சீரி ஏ கழகமான பொலொக்னாவின் மைதானத்தில் புதன்கிழமை (22) அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்ட் தோற்றது.
டொட்டமுண்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை செர்ஹெள குய்ரசி பெற்றதோடு, பொலொக்னா சார்பாக திஜ்ஸ் டலிங்கா, சாமுவேல் லிங்-ஜுனியர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில் பெல்ஜியக் கழகமான கிளப் ப்ரூகேயின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸ் 0-0 என்ற கோல் கணக்கில் சமப்படுத்தியது.
இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற புண்டெலிஸ்கா கழகமான பயேர் லெவர்குசனுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட் வென்றது. மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் ஜூலியன் அல்வரேஸ் பெற்றதோடு, லெவர்குசன் சார்பாகப் பெறப்பட்ட கோலை பியர்ரோ ஹின்கபி பெற்றிருந்தார்.
இது தவிர தமது மைதானத்தில் நடைபெற்ற பிரெஞ்சு லீக் 1 கழகமான லில்லியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலும், போர்த்துக்கல் கழகமான பெய்பிக்காவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 5-4 என்ற கோல் கணக்கில் வென்ற லா லிகா கழகமான பார்சிலோனாவும் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதி பெறுவதை இன்னுமொரு போட்டி மீதமிருக்கையிலேயே உறுதிப்படுத்தின.
39 minute ago
49 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
49 minute ago
4 hours ago
5 hours ago