Shanmugan Murugavel / 2015 நவம்பர் 02 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இருபத்து மூன்று வருடங்களின் பின் இடம்பெற்ற மெக்ஸிகோ கிரான்ட் பிறிக்ஸில் மெர்சிடஸ் அணியின் ஜெர்மனியைச் சேர்ந்த நிக்கோ ரோஸ்பேர்க் வெற்றி பெற்றுள்ளார்.
இது, இந்த வருடத்தில் ரோஸ்பேர்க் பெறும் நான்காவது வெற்றி என்பதோடு, அவர் தன் வாழ்நாளில் பெறும் 12ஆவது வெற்றியாகும். இந்தப் பந்தயத்தில் வெற்றிபெற்ற ரோஸ்பேர்க், கடந்த மூன்று பந்தயங்களிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்த சக அணி வீரரான பிரித்தானியாவின் லூயிஸ் ஹமில்டனின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளார்.
கடந்த மூன்று தடவைகளிலும் முதலாவதாக பந்தயத்தை ஆரம்பித்து, தோல்வியுற்றிருந்த ரோஸ்பேர்க், இந்த, நான்காவது முறையை வெற்றிக் கனியை ருசித்துக் கொண்டார்.
கடந்த வாரம் அமெரிக்க அமெரிக்க கிரான்ட் பிறிக்ஸை வெற்றி கொண்டதன் மூலம் தனது மூன்றாவது உலக சம்பியன்ஷிப்பை வென்ற ஹமில்டன், ரோஸ்பேர்க்கை விட 1.954 செக்கன்கள் குறைவாகக் கடந்து இரண்டாமிடத்தைப் பெற்றார்.
இந்தப் பந்தயத்தில் மூன்றாமிடத்தை வில்லியம்ஸ் அணியின் பின்லாந்து சாரதியான வல்ட்டேரி போல்ட்டாஸும் நான்காமிடத்தை ரெட்புல் அணியைச் சேர்ந்த ரஷ்யாவின் டனில் கிவ்யாட்டும் ஐந்தாம் இடத்தை அதே ரெட்புல் அணியைச் சேர்ந்த அவுஸ்திரேலியாவின் டேனியல் ரிச்சியார்டோவும் பெற்றனர்.
இப்பந்தயத்தில் இடையில் விலகியதனால், பெராரி அணியின் செபஸ்ட்டியான் விட்டல், புள்ளிகள் அடிப்படையில் மூன்றாமிடத்துக்குச் சென்றார். இன்னும் இரண்டு பந்தயங்கள் உள்ள நிலையில் ஹமில்டன் 345 புள்ளிகளுடனும் ரோஸ்பேர்க் 272 புள்ளிகளுடனும் விட்டல் 251 புள்ளிகளுடனும் உள்ளனர்.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago