Shanmugan Murugavel / 2015 நவம்பர் 04 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
அயர்லாந்துக்காக விளையாடி, இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்து, அவ்வணிக்காக போட்டிகளில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் போய்ட் ராங்கின், மீண்டும் அயர்லாந்து அணிக்காக விளையாடவுள்ளாரெனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அயர்லாந்துக்காக 37 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் 15 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் பங்குபற்றிய ராங்கின், 2013ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்துக்கா விளையாடியிருந்தார். 7 ஒ.நா.ச போட்டிகளிலும் 2 இருபதுக்கு-20 சர்வசேப் போட்டிகளிலும் ஒரு டெஸ்ட் போட்டியிலும் பங்குபற்றியிருந்த அவர், கடந்தாண்டு ஜனவரிக்குப் பின்னர், இங்கிலாந்துக்காகத் தெரிவு செய்யப்பட்டிருக்கவில்லை.
இனிவரும் காலங்களிலும், இங்கிலாந்துக்காக அவர் தெரிவுசெய்யப்படுவாரா என்ற சந்தேகம் காணப்படுகின்றது. தெரிவுசெய்யப்படுவதற்கான சமிக்ஞையையும் இங்கிலாந்துத் தேர்வாளர்கள் வெளிப்படுத்தியிருக்கவில்லை.
இந்நிலையிலேயே, 31 வயதான ராங்கின், மீண்டும் அயர்லாந்துக்காக முடிவு செய்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் சபை விதிகளின்படி, ஓர் அணிக்காக விளையாடி 2 வருடங்களின் பின்னரே மற்றைய அணிக்காக விளையாடலாம். இதன்படி, அடுத்தாண்டு ஜனவரியிலிருந்து, அயர்லாந்துக்காக விளையாடும் தகுதியை ராங்கின் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago