Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டத் தொடருக்கான தனது போட்டியில், செல்சி அணி தோல்வியைச் சந்தித்துள்ளது. ஏ.எப்.சி போன்மெத் அணிக்கெதிரான போட்டியிலேயே செல்சி அணி தோல்வியைத் தழுவியது.
போட்டியின் ஆரம்பத்திலேயே போன்மெத் அணி, பந்தைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விளையாடியது. போட்டியின் முதலாவது சந்தர்ப்பத்தை 9ஆவது நிமிடத்தில் ஏற்படுத்திய அவ்வணி, அதைக் கோலாக்க முடியாதவாறு, செல்சி அணியின் கோல் காப்பாளரான கோர்டொய்ஸ் தடுத்திருந்தார்.தொடர்ந்தும், முதலாவது பாதியில் பந்தை போன்மெத் அணி, அதிகபட்சம் தம்வசம் வைத்திருந்திருந்த போதிலும், கோலொன்றைப் பெற்றுக் கொள்ள அவ்வணி தடுமாறியிருந்தது.
இரண்டாவது பாதியில், முதற்பாதியை விடச் சிறப்பான ஆட்டத்தை செல்சி வெளிப்படுத்தியது. எனினும், பெரும்பாலான நேரத்தில், இரு அணிகளாலும் கோல்னளைப் பெற்றுக் கொள்ள முடிந்திருக்கவில்லை. போட்டியின் 82ஆவது நிமிடத்தில், கோணத் திசையிலிருந்து கிடைத்த பந்தை இலாகவமாகத் திருப்பிய கிளென் மரே, அதனைக் கோலாக்கினார்.
அதன் பின்னர், இரு அணிகளும் முயற்சித்த போதிலும், இரு அணிகளாலும் கோல்களைப் பெற்றுக் கொள்ள முடியாது போக, போன்மெத் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
9 போட்டிகளில் வெற்றிபெறாமல், செல்சியின் சொந்த மைதானத்தில் இப்போட்டியில் பங்குபற்றிய போன்மெத் அணி, தோல்வியுறுமென்றே எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அவ்வணி வெற்றிபெற்றுள்ளமை, ஏற்கெனவே தோல்விகளால் துவண்டுவரும் செல்சி அணிக்கு, அதிக அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, இடம்பெற்ற ஏனைய போட்டியில் மன்செஸ்டர் சிற்றி அணி, ஸ்டோக் சிற்றி அணியிடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. ஆர்சனல் அணி, சண்டர்லான்ட் அணியை 3-1 என்ற கோல் கணக்கிலும், லெய்செஸ்டர் சிற்றி அணி, ஸ்வான்சீ சிற்றி அணியை 3-0 என்ற கோல் கணக்கிலும், வாட்போர்ட் அணி, நோர்விச் சிற்றி அணியை 2-0 என்ற கோல் கணக்கிலும் வெற்றிபெற்றன. மன்செஸ்டர் யுனைட்டட் - வெஸ்ட் ஹாம் யுனைட்டட் போட்டி (0-0), சௌதம்டன் - அஸ்டன் வில்லா (1-1), வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியன் - டொட்டென்ஹம் ஹொட்ஸ்பர்ஸ் (1-1) போட்டிகள், சமநிலையில் முடிவடைந்தன.
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago