Shanmugan Murugavel / 2016 ஜூன் 26 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் முன்னாள் தலைவரான என். ஸ்ரீனிவாசன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக, மீண்டுமொருமுறை தெரிவுசெய்யப்பட்டுள்ளார். சங்கத்தின் 86ஆவது வருடாந்த பொதுக் கூட்டம், சென்னையில் இன்று இடம்பெற்றது.
ஐ.பி.எல் மோசடியைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் பதவியிலிருந்து ஒதுங்க வேண்டியேற்பட்ட ஸ்ரீனிவாசன், இந்தத் தேர்தலில் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தினார்.
இதன்மூலம், தொடர்ந்து 15ஆவது ஆண்டாக, அச்சபையின் தலைவராக ஸ்ரீனிவாசன் தெரிவாக, தொடர்ந்து 10ஆவது ஆண்டாக காசி விஸ்வநாதன், செயலாளராகத் தெரிவானார்.
எந்தவொரு பதவிக்கும், போட்டியாளர்கள் காணப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவித்த இந்திய ஊடகங்கள், போட்டிகளின்றியே அனைவரும் தெரிவானதாகக் குறிப்பிட்டன.
தலைவர்: என். ஸ்ரீனிவாசன்
உப தலைவர்கள் (நகரம்): கல்பாத்தி எஸ். அகோரம், கே. முரளி, பி.எஸ் இராமன், ஜி. ஸ்ரீனிவாசன்
உப தலைவர்கள் (மாவட்டங்கள்): ஜி. பாஸ்கரன், வி. ரமேஷ்
செயலாளர்: காசி விஸ்வநாதன்
இணைச் செயலாளர்: ஆர்.ஐ. பழனி
உப செயலாளர்: எஸ். மார்ட்டின் ராஜ்
பொருளாளர்: வி.பி. நரசிம்ஹன்
14 minute ago
23 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago
53 minute ago
1 hours ago