Shanmugan Murugavel / 2016 நவம்பர் 16 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வே, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் பங்குபெறும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 2ஆவது போட்டியில், இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இன்று மோதின. இதில் மேற்கிந்தியத் தீவுகள் அணி, 62 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
ஹராரேயில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 227 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஜொனதன் கார்ட்டர் 54 (62), ஷாய் ஹோப் 47 (81), றொவ்மான் பவல் 44 (29) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் நுவான் குலசேகர, சுரங்க லக்மால், நுவான் பிரதீப் மூவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
228 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 43.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 165 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுத் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், சச்சித் பத்திரண 45 (40), ஷெஹான் ஜயசூரிய 31 (59), நிரோஷன் டிக்வெல்ல 28 (45) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீசசில் ஷனொன் கப்றியல், ஆஷ்லி நேர்ஷ் இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும் ஜேஸன் ஹோல்டர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக, ஜேஸன் ஹோல்டர் தெரிவானார்.
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago