Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்றுவரும் றக்பி உலகக் கிண்ணப் போட்டிகளில், போட்டிகளை நடாத்தும் நாடான இங்கிலாந்து, குழுநிலைப் போட்டிகளுடன் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கெதிரான தோல்வியையடுத்தே அவ்வணி வெளியேற்றப்பட்டுள்ளது.
டுவிக்கென்ஹமில் இடம்பெற்ற இப்போட்டியில், ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய அவுஸ்திரேலிய அணி, முதலாவது புள்ளிகளைப் பெற்றது. இதன்படி, முதற்பாதி முடிவில், 17-3 என்ற புள்ளிகள் கணக்கில் அவுஸ்திரேலிய அணி முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் போராட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி, 13-20 என்ற நிலைக்கு வந்த போதிலும், அதன் பின்னர் தனது ஆதிக்கத்தைச் செலுத்திய அவுஸ்திரேலியா, 33-13 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது. இதன்படி, றக்பி உலகக் கிண்ண வரலாற்றிலேயே, குழுநிலைப் போட்டிகளோடு வெளியேற்றப்பட்ட, போட்டிகளை நடாத்திய முதலாவது நாடாக இங்கிலாந்து மாறியது.
தென்னாபிரிக்க அணிக்கும் ஸ்கொட்லாந்து அணிக்குமிடையிலான போட்டியில், தென்னாபிரிக்க அணி 34-16 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது. முதற்பாதியில் 20-3 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்த அவ்வணி, அதன் பின்னர் ஓரளவு அழுத்தத்தை எதிர்கொண்ட போதிலும், 34-16 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.
ஜப்பானுக்கும் சமோவாவுக்குமிடையிலான போட்டியில், ஜப்பான் அணி சிறப்பான வெற்றியைப் பெற்றுக் கொண்டது.
முதற்பாதியில் முழுமையான ஆதிக்கத்தை வெளிப்படுத்திய ஜப்பான், 20-0 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னணி வகித்தது. அதன் பின்னர், இரண்டாவது பாதியில் 6 புள்ளிகளை மாத்திரமே அவ்வணி பெற்ற போதிலும், இறுதியில் 26-5 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago