Shanmugan Murugavel / 2016 ஜனவரி 07 , மு.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில், இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது. இதன்மூலம், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளின் தரப்படுத்தலில் தனது முதலிடத்தை இழக்கும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களைக் குவித்தது. 10.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 101 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்த அவ்வணி, இறுதி நேரத்தில் போதியளவு வேகமாகத் துடுப்பெடுத்தாடியிருக்காத போதிலும், 182 என்ற சவாலான இலக்கை, இலங்கைக்கு வழங்கியது.
துடுப்பாட்டத்தில் மார்ட்டின் கப்டில் 58 (34), கேன் வில்லியம்ஸன் 53 (42), கொலின் முன்றோ 36 (26), றொஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் 22 (9) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், 4 ஓவர்களில் 26 ஓட்டங்களைக் கொடுத்த நுவான் குலசேகர, 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
183 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 3 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
4 விக்கெட்டுகளை இழந்து 42 ஓட்டங்களுடனும், 5 விக்கெட்டுகளை இழந்து 84 ஓட்டங்களுடனும் காணப்பட்ட இலக்கை சார்பாக, கீழ் மத்தியவரிசை வீரர்கள் சிறப்பாகச் செயற்பட்ட பொதிலும், வெற்றி கிடைக்காமல் போனது.
துடுப்பாட்டத்தில் தனுஷ்க குணதிலக 46 (29), மிலிந்த சிரிவர்தன 42 (31), திஸர பெரேரா 28 (19) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ட்ரென்ட் போல்ட், மற் ஹென்றி இருவரும் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக, ட்ரென்ட் போல்ட் தெரிவானார்.
இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது போட்டி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், அப்போட்டியில் வெற்றிபெற்றால் மாத்திரமே, முதலிடத்தைத் தக்க வைத்துக் கொள்ள, இலங்கையால் முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago