Gopikrishna Kanagalingam / 2015 டிசெம்பர் 06 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் முடிவில் இந்திய அணி முன்னிலை வகிக்கின்ற போதிலும், சிறந்ததொரு போராட்டத்தை தென்னாபிரிக்க அணி வெளிப்படுத்தியுள்ளது.
4 விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களுடன் நேற்றைய நாளை ஆரம்பித்த இந்திய அணி, 5 விக்கெட்டுகளை இழந்து 267 ஓட்டங்களைப் பெற்று, தனது இனிங்ஸை இடைநிறுத்தியது.
சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய அஜின்கியா ரஹானே, ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களைப் பெற்றார். இப்போட்டியில் அவர் பெறும் இரண்டாவது சதம் இதுவாகும். அத்தோடு, இத்தொடரில் மொத்தமாகப் பெறப்பட்ட 2 சதங்களையும் ஒரே போட்டியிலேயே அவர் பெற்றுக் கொண்டார். தவிர, விராத் கோலி 88 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில், மோர்னி மோர்க்கல் 3 விக்கெட்டுகளையும் கைல் அபொட், இம்ரான் தாஹிர் இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
481 ஓட்டங்களை வெற்றி இலக்காக அல்லது, 150க்கும் மேற்பட்ட ஓவர்களில் துடுப்பெடுத்தாடி, வெற்றி தோல்வியற்ற முடிவு என்பதை நோக்கித் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி, நேற்றைய நாள் முடிவில் 72 ஓவர்களின் நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 72 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
ஆரம்பம் முதலே மெதுவாக விளையாடிய தென்னாபிரிக்க அணி சார்பாக, 207 பந்துகளைச் சந்தித்த ஹஷிம் அம்லா, ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களையும் 91 பந்துகளைச் சந்தித்த ஏபி டி வில்லியர்ஸ், ஆட்டமிழக்காமல் 11 ஓட்டங்களைப் பெற்றனர். தவிர, 117 பந்துகளைச் சந்தித்த தெம்புவ பவுமா, 34 ஓட்டங்களைப் பெற்றார்.ட
இந்தத் தொடரில் தடுமாறியிருந்த ஹஷிம் அம்லா, மிகப்பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது 207 பந்துகளில் ஆட்டமிழக்காமல் அவர் பெற்ற 23 ஓட்டங்கள், டெஸ்ட் போட்டிகளில் 200 அல்லது அதற்கு அதிகமான பந்துகளைச் சந்தித்து, குறைவான ஸ்ட்ரைக் ரேட்-இல் ஓட்டங்கள் பெறப்பட்ட சந்தர்ப்பமாகும்.
வீழ்த்தப்பட்ட 2 விக்கெட்டுகளையும், இரவிச்சந்திரன் அஷ்வின் வீழ்த்தினார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago