Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக கால்பந்து கட்டுப்பாட்டு அமைப்பான பீபாவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணையின் ஓர் அங்கமாக முன்னாள் பெரு கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் மனுவல் புர்கா கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய அமெரிக்க நீதித் திணைக்களத்தினால் கடந்த வெள்ளிக்கிழமை (04) குற்றஞ்சாட்டப்பட்ட பதினாறு பேரில் ஒருவராக 58 வயதான மனுவல் புர்காவும் காணப்படுகின்றார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு பெருவின் தலைநகரான லீமாவிலுள்ள தனது வீட்டுக்கு திரும்பியபோதே, அங்கு அவைத்து மனுவல் புர்கா தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலா அரச வழக்கறிஞர்கள், அந்நாட்டு கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் பிரயான் ஜிமெனிசுக்கு பிடியாணை பிறப்பித்துள்ளனர்.
ஜிமெனிஸ், அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட முன், அவரைக் கைது செய்யுமாறு கடந்த வியாழக்கிழமை (03), ஐக்கிய அமெரிக்க நீதித் திணைக்களம் கோரியதாக பொது அமைச்சு அதிகாரி பிரான்சிஸ்கோ ரிவாஸ் தெரிவித்துள்ளார். தவிர, ஜிமெனிஸின் சொந்தமான பொருட்களை கைப்பற்றுமாறு கோரப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago