Shanmugan Murugavel / 2015 நவம்பர் 02 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்சி அணியானது தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்துவரும் நிலையில், அவ்வணியின் முகாமையாளர் ஜொஸ் மொரின்ஹோவுக்கான ஆதரவு, செல்சி அணிக்குள்ளும் குறைவடைந்து வருவதாக அறிவிக்கப்படுகின்றது.
அவ்வணியின் மூத்த வீரரொருவர், ஜொஸ் மொரின்ஹோவுக்காக 'வெல்வதை விட நான் தோற்பேன்" எனத் தெரிவித்ததாக, பிரபல பி.பி.சி அறிவிப்பாளரான கரி றிச்சர்ட்ஸனின் நிகழ்ச்சியின்போது வெளிப்படுத்தப்பட்டது. இது, அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது.
செல்சி அணியின் முதல்நிலை அணியின் வீரரொருவரிடமிருந்தே இந்தத் தகவல் கிடைத்ததாகத் தெரிவித்த றிச்சர்ட்ஸன், செல்சி அணியிலுள்ள பல்வேறு வீரர்கள், மொரின்ஹோவுடன் முரண்பாடான உறவைக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, அவ்வணியின் முன்னணி வீரரான ஈடன் ஹஸார்டுடனான மொரின்ஹோவின் உறவும் மோசமான நிலையை அடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
வெளியாகும் தகவல்களின்படி, இந்தப் பருவகால முடிவைத் தாண்டி, செல்சி அணியின் முகாமையாளராக மொரின்ஹோ காணப்பட்டால், றியல் மட்ரிட் கழகத்துக் செல்ல, ஹஸார்ட் தயாராகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
4 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago