Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 21 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
போட்டி மத்தியஸ்தரை விமர்சித்தமைக்காகத் தண்டனை விதிக்கப்பட்ட செல்சி அணியின் முகாமையாளர் ஜொஸ் மொரின்ஹோ, மற்றொரு போட்டி மத்தியஸ்தர் பற்றி மீண்டுமொரு விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
சௌதம்டன் அணிக்கெதிரான போட்டியின் பின்னர் மேற்கொண்ட விமர்சனத்துக்காக 50,000 ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்களும் ஒத்திவைக்கப்பட்ட ஒரு போட்டித் தண்டனையும் விதிக்கப்பட்ட நிலையிலேயே, அவரது இந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
சம்பியன்ஸ் லீக் தொடரில் டைனமோ கைவ் அணிக்கெதிரான போட்டியில், செல்சி அணிக்கான பெனால்டி ஒன்றை வழங்காமைக்காகவே ஜொஸ் மொரின்ஹோ, போட்டி மத்தியஸ்தரை விமர்சித்துள்ளார்.
'போட்டி மத்தியஸ்தர், பலவீனமானவராகவும் ஏமாளியாகவும் இருந்தார். அதுவொரு பெரிய பெனால்டி" என அவர் தெரிவித்தார். 'போட்டி முடிவானது 0-0 என்ற கோல் கணக்கில் காணப்படும் போது, அவ்வாறான பெனால்டி வாய்ப்பு வழங்கப்படாமையானது போட்டியின் முக்கியமான தருணமாகும்" என அவர் மேலும் தெரிவித்தார்.
போட்டி மத்தியஸ்தர் உண்மையில் சிறந்தவர் என நான் நினைக்கிறேன், ஆனால் அவரொரு தவறை மேற்கொண்டுள்ளார் என நான் நினைக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
4 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago