2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

மேற்கிந்தியத் தீவுகளை இருபதுக்கு-20 கிரிக்கெட் அழித்துவிட்டது

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக் போன்ற இருபதுக்கு-20 போட்டிகள், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியைக் அழித்துவிட்டதாக, மேற்கிந்தியத் தீவுகளின் சகலதுறை ஜாம்பவனான் சேர் கார்பீல்ட் சோபர்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றுவரும் சோபர்ஸ் - திஸ்ஸெரே கிண்ணத்துக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக இலங்கைக்கு வந்துள்ள அவர், இங்கு வைத்துக் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

'இருபதுக்கு-20 போட்டிகள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என நான் நினைக்கிறேன்" எனத் தெரிவித்த அவர், இருபதுக்கு-20 போட்டிகள் மறைந்து போகுமென நினைக்கவில்லையெனத் தெரிவித்த அவர், பார்வையாளர்களை மீண்டும் வெற்றி கொள்வதற்காக பகலிரவு டெஸ்ட் போட்டிகளை ஏற்பாடு செய்வதை வரவேற்பதாகத் தெரிவித்தார்.

டெஸ்ட் போட்டிகளை இருபதுக்கு-20 போட்டிகள் அழித்துவிட்டனவா எனக் கேட்கப்பட்டபோது, 'நான் அப்படித் தான் நினைக்கிறேன். மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட்டை அது நிச்சயமாக அழித்துவிட்டது. அதை நான் சொல்வேன்" எனத் தெரிவித்தார்.

தற்போதைய நிலையில், கிரிக்கெட்டில் ஏராளமான பணம் காணப்படுவதாகத் தெரிவித்த சோபர்ஸ், தன்னுடைய காலத்தில் காணப்பட்ட ஆர்வமும் மனமும் தற்போதைய கால வீரர்களில் பெரும்பாலானோரில் காணப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கருத்துக்களை வெளியிட்ட சோபர்ஸ், ஒரு கட்டத்தில் கண்கலங்கியிருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .