Shanmugan Murugavel / 2015 நவம்பர் 04 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்றுநராக, பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் இன்ஸமாம் உல் ஹக், இன்னும் இரண்டு வருடங்களுக்குப் பணியாற்றவுள்ளார். அதற்கான ஒப்பந்தம், கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையால் வழங்கப்பட்ட 2 வருடத்துக்கான ஒப்பந்தத்தை இன்ஸமாம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், சிம்பாப்வேயில் இடம்பெற்ற தொடரே, அவரை இந்த முடிவுக்குத் தூண்டியதாகவும் அறிவிக்கப்படுகின்றது.
அண்மையில் சிம்பாப்வே அணிக்கெதிராக சிம்பாப்வேயில் வைத்து இடம்பெற்ற இருபதுக்கு-20 சர்வதேசத் தொடர், ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் ஆகியவற்றை ஆப்கானிஸ்தான் அணி, இன்ஸமாமின் பயிற்றுவிப்பின் கீழ் கைப்பற்றியிருந்தது.
ஆப்கானிஸ்தானின் பயிற்றுநர் பதவியை அவர், தற்காலிக அடிப்படையிலேயே ஏற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago