2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

மிஷ்ரா மீது குற்றச்சாட்டு

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடல் ரீதியாக தாக்குதல் நடத்தியதாக இந்திய சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஷ்ரா மீது பெண்ணொருவர் பெங்களூர் பொலிஸில் வழக்குப் பதிவு செய்துள்ளார். மிஷ்ராவுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதை பெங்களூர் மத்திய பிரிவு பொலிஸ் ஆணையாளர் சந்தீப் பட்டேல் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், விசாரணை அதிகாரிக்கு முன் ஆஜராகுமாறு மிஷ்ராவுக்கு அழைப்பு அனுப்பபட்டுள்ளது.

தென்னாபிரிக்க தொடருக்கு முன்பதாக பெங்களூரில் இந்திய அணி பயிற்சி முகாமில் இருந்தபோதே, கடந்த மாதம் இறுதி வாரமே மேற்படி சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும், அந்தப் பெண்ணை மிஷ்ராவுக்கு தெரியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இருவரும் முரண்பட்டுக்கொண்டதாவும், மிஷ்ரா உடல் ரீதியாக தாக்கியதாகவும், வசைமொழிகளை கூறி காயப்படுத்தியதாக அந்தப் பெண் தெரிவித்ததாக பட்டேல் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் தென்னாபிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இந்தியக் குழாமில் இடம்பெற்றிருக்கிற மிஷ்ரா, எதிர்வரும் 5ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள டெஸ்ட் தொடருக்கான குழாமிலும் இடம்பெற்றுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .