Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 07 , மு.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, மூன்று, ஒருநாள் சர்வதேசப்போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகின்ற நிலையில், தற்போது தொடர், 1-1க்கு என்ற ரீதியில் சமநிலையாகியுள்ள நிலையில், தீர்மானமிக்கதும் இறுதியுமான மூன்றாவது போட்டி, இலங்கை நேரப்படி நாளை காலை 6.30மணிக்கு ஹமில்டனில் இடம்பெறவுள்ளது. இப்போட்டியே, நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவரான பிரெண்டன் மக்கலத்தின் இறுதி ஒருநாள் சர்வதேசப் போட்டியாக அமையவுள்ளது.
இந்நிலையில், இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் மத்தியவரிசையிலிருந்து ஓட்டங்கள் பெறப்படுமானால் அவ்வணி தொடரைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுகணம், இத்தொடரின் முக்கிய கட்டங்களில் தனது பங்களிப்பை வழங்கிய நியூசிலாந்து அணியின் சகலதுறைவீரர் மிட்செல் சாண்ட்னர், வலது காலில் நோவு காரணமாக, தனது சொந்த மைதானமான ஹமில்டனில் இடம்பெறும் இப்போட்டியில் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் அவுஸ்திரேலிய அணி- உஸ்மான் கவாஜா, டேவிட் வோணர், ஸ்டீவன் ஸ்மித் (தலைவர்), ஜோர்ஜ் பெய்லி, கிளென் மக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ் மத்தியூ வேட், ஜோன் ஹேஸ்டிங்ஸ், அடம் ஸாம்பா, ஸ்கொட் போலண்ட், ஜோஷ் ஹேசில்வூட்
எதிர்பார்க்கப்படும் நியூசிலாந்து அணி- மார்ட்டின் கப்தில், பிரெண்டன் மக்கலம் (தலைவர்), கேன் வில்லியம்ஸன், ஹென்றி நிக்கோல்ஸ், கிராண்ட் எலியற், கொரே அன்டர்சன், லுக் ரோங்கி, மிட்செல் சாண்ட்னர், அடம் மில்ன், மற் ஹென்றி, ட்ரெண்ட் போல்ட்
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago