Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்று வரும் சம்பியன்ஸ் லீக் குழு நிலைப் போட்டிகளில் மன்செஸ்டர் சிற்றி, அட்லெட்டிக்கோ மட்ரிட் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளதோடு, ரியல் மட்ரிட்-பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணிகளுக்கிடையிலான போட்டியும், மன்செஸ்டர் யுனைட்டெட்-சிஎஸ்கேஏ மொஸ்கோ இடையிலான போட்டியும் சமநிலையில் முடிவடைந்துள்ளது.
இதில் மன்செஸ்டர் சிற்றி-செவில்லா அணிகளுக்கிடையிலான போட்டியில் கெவின் டி ப்ரூன் 91வது நிமிடத்தில் பெற்ற கோலின் மூலம் சிற்றி அணி வெற்றி பெற்றுள்ளது. ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் செவில்லா அணியின் கொநோப்பிலயங்கா கோலினைப் பெற்று அவ்வணிக்கு முன்னிலை வழங்கியபோதும், அடுத்த 6ஆவது நிமிடத்தில் வில்பிரைட் போனி அடித்த பந்து செவில்லா அணியின் அதில் ரமியின் காலில் பட்டு கோலாக மாற கோல் எண்ணிக்கை சமநிலையாகியிருந்தது.
இதேவேளை அட்லெட்டிக்கோ மட்ரிட் அணிக்கும் அஸ்டானா அணிக்குமிடையிலான போட்டியில் அட்லெட்டிக்கோ அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதில் அட்லெட்டிக்கோ அணி சார்பாக சகுல் நிகுஸ், ஜக்சன் மார்ட்டின்ஸ், ஒலிவர் டொரஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலினைப் பெற்றனர். டெனிஸ் டெட்செங்கோ ஒரு ஒவ்ண் கோலினைப் பெற்றிருந்தார்.
இந்நிலையில், ரியல் மட்ரிட்- பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணிகளுக்கிடையிலான குழு ஏ போட்டியில் இரு அணிகளும் கோலெதனையும் பெறாதநிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
மன்செஸ்டர் யுனைட்டெட், சிஎஸ்கேஏ மொஸ்கோ அணிகளுக்கெதிரான போட்டியும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. இதில் முதற்பாதியில் பனால்டி ஏற்படக் காரணமான அந்தோணி மார்ஷியலே இரண்டாவது பாதியில் யுனைட்டெட் அணிக்காக கோலைப் பெற்றிருந்தார்.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago