2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

மன்செஸ்டர் சிற்றி, எவேர்ட்டன், ஸ்டோக் சிற்றி வெற்றி

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் இங்கிலாந்தின் லீக் கிண்ணத் தொடரான கப்பிற்றல் வண் கிண்ணத்துக்கான காலிறுதிப் போட்டிகளில், மன்செஸ்டர் சிற்றி, எவேர்ட்டன், ஸ்டோக் சிற்றி அணிகள் வெற்றிபெற்றுள்ளன. இதில், 43 வருடங்களின் பின்னர், இத்தொடரின் அரையிறுதிக்கு, ஸ்டோக் சிற்றி அணி தகுதிபெற்றுள்ளது.

மன்செஸ்டர் சிற்றி அணிக்கும் ஹள் சிற்றி அணிக்குமிடையிலான போட்டியில் மன்செஸ்டர் சிற்றி அணி, 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
மன்செஸ்டர் சிற்றி சார்பாக 12ஆவது நிமிடத்தில் வில்பிரட் போனி, 80ஆவது நிமிடத்தில் கெலெச்சி இஹெனாச்சோ, 82, 97ஆவது நிமிடங்களில் கெவின் டி பிரைன், ஆகியோர் கோல்களைப் பெற்றனர். 90ஆவது நிமிடத்தில் ஹள் சிற்றியின் அன்ட்ரூ றொபேர்ட்ஸன் பெற்றுக் கொடுத்தார்.

எவேர்ட்டன் அணிக்கும் மிடில்புரோ அணிக்குமிடையிலான போட்டியில் எவேர்ட்டன் அணி, 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. 20ஆவது நிமிடத்தில் ஜெரார்ட் டுலொபெ, 28ஆவது நிமிடத்தில் றொமேலு லூகாகு ஆகியோர் கோல்களைப் பெற்றுக் கொடுத்தனர்.

ஸ்டோக் சிற்றி அணிக்கும் ஷெபீல்ட் வெனிஸ்டே அணிக்குமிடையிலான போட்டியில் ஸ்டோக் சிற்றி அணி, 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. 30ஆவது நிமிடத்தில் இப்ராஹிம்அபெலே, 75ஆவது நிமிடத்தில் பில் பார்ட்ஸ்லே ஆகியோர் கோல்களைப் பெற்று, அவ்வணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .