2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

மன்செஸ்டர் சிற்றி வெற்றி: யுனைட்டட் தோல்வி

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் கால்பந்தாட்ட லீக் போட்டிகளில், மன்செஸ்டர் சிற்றி, லிவர்பூல், சௌதம்டன் கழகங்கள் வெற்றிபெற்றுள்ளன. மன்செஸ்டர் யுனைட்டட் அணி, பெனால்டி அடிப்படையில் தோல்வியடைந்தது.

லிவர்பூல் அணிக்கும் ஏ.எப்.சி போர்ன்மொத் அணிக்குமிடையிலான போட்டியில், 17ஆவது நிமிடத்தில் நதானியல் கிளைன் பெற்ற கோலின் உதவியுடன், லிவர்பூல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

மன்செஸ்டர் சிற்றி அணிக்கும் கிறிஸ்டல் பலஸ் அணிக்குமிடையிலான போட்டியில், மன்செஸ்டர் சிற்றி அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக வில்பிரட் போனி, கெவின் டி பிரையுன், கெலெச்சி இஹெனாச்சோ, யாயா டுவரே, மனு கார்சியோ ஆகியோர் கோல்களைப் பெற, கிறிஸ்டல் பலஸ் சார்பாக டேமியன் தெலனி கோலைப் பெற்றார்.

சௌதம்டன் அணிக்கும் அஸ்டன் வில்லா அணிக்குமிடையிலான போட்டியில் சௌதம்டன் அணி, 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. சௌதம்டன் சார்பாக மாயா யோஷிடா, கிரேஸியானோ பெல்லே ஆகியோர் கோல்களைப் பெற, அஸ்டன் வில்லா சார்பாக ஸ்கொட் சின்கிளையர் கோலைப் பெற்றார்.

மன்செஸ்டர் யுனைட்டட் அணிக்கும் மிடில்ஸ்பிரோ அணிக்குமிடையிலான போட்டியில் முழு நேரத்தில் கோல்கள் பெறப்படாத நிலையில், பெனால்டி முறையில் முடிவு தீர்மானிக்கப்பட்டது. இதில், வெய்ன் றூண, மைக்கல் கார்றிக், ஆஷ்லி யங் மூவரும் தங்கள் வாய்ப்புகளைத் தவறவிட, 1-3 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டட் அணி தோல்வியடைந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .