2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

மரேயைத் தோற்கடித்து சம்பியனானார் ஜோக்கோவிச்

Shanmugan Murugavel   / 2017 ஜனவரி 08 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் முன்னாள் முதல்நிலை வீரரும் தற்போதைய இரண்டாம் நிலை வீரருமான சேர்பியாவின் ஜோக்கோவிச், உலகின் முதல்நிலை வீரரான அன்டி மரேயைத் தோற்கடித்து, தனது கட்டார் பகிரங்கத் தொடர் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார்.

இப்போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம், தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் சங்கத் தொடர் போட்டிகளில், மரே பெற்று வந்த தொடர்ச்சியான 28 வெற்றிகளுக்கு ஜோக்கோவிச் முடிவு கட்டியுள்ளார்.

இரண்டு மணித்தியாலங்கள் 54 நிமிடங்கள் இடம்பெற்ற போட்டியில், 6-3, 5-7, 6-4 என்ற செட் கணக்கில், ஜோக்கோவிச்சிடம் மரே தோல்வியுற்றிருந்தார். இப்போட்டியில் தோல்வியுற்றபோதும், தரவரிசையில் மரேயே முதலாமிடத்தில் நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .