2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

முதலாமிடத்துக்கு முன்னேறிய பும்ரா

Mayu   / 2024 பெப்ரவரி 08 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்துக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே மூன்றாமிடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி முதலாமிடத்தையடைந்துள்ளார்.

இதேவேளை ஆப்கானிஸ்தானுக்கெதிரான போட்டியில் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இலங்கையின் பிரபாத் ஜெயசூரிய, ஒன்பதாமிடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி ஆறாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

1. ஜஸ்பிரிட் பும்ரா, 2. ககிஸோ றபாடா, 3. இரவிச்சந்திரன் அஷ்வின், 4. பற் கமின்ஸ், 5. ஜொஷ் ஹேசில்வூட், 6. பிரபாத் ஜெயசூரியா, 7. ஜேம்ஸ் அன்டர்சன், 8. நேதன் லையன், இரவீந்திர ஜடேஜா, ஒலி றொபின்ஸன்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

1. கேன் வில்லியம்சன், 2. ஸ்டீவ் ஸ்மித், 3. ஜோ றூட், 4. டரைல் மிற்செல், 5. பாபர் அஸாம், 6. உஸ்மான் கவாஜா, 7. விராட் கோலி, 8. ஹரி ப்ரூக், 9. திமுத் கருணாரத்ன, 10. மர்னுஸ் லபுஷைன்.

இந்நிலையில் மேற்குறிப்பிட்ட டெஸ்டில் 58 ஓட்டங்களைப் பெற்ற இங்கிலாந்தின் அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ், சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் ஐந்தாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி நான்காமிடத்தையடைந்துள்ளார்.

இதேவேளை இதே போட்டியில் 72 ஓட்டங்களைப் பெற்றதுடன், 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அக்ஸர் பட்டேல், ஆறாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஐந்தாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

1. இரவீந்திர ஜடேஜா, 2. இரவிச்சந்திரன் அஷ்வின், 3. ஷகிப் அல் ஹஸன், 4. பென் ஸ்டோக்ஸ், 5. அக்ஸர் பட்டேல்.

இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்டஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியாவின் அடம் ஸாம்பா, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் நான்காமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

1. கேஷவ் மஹராஜ், 2. ஜொஷ் ஹேசில்வூட், 3. அடம் ஸாம்பா, 4. மொஹமட் சிராஜ், 5. ரஷீட் கான், 6. ஜஸ்பிரிட் பும்ரா, 7. ஷகீன் ஷா அஃப்ரிடி, 8. மொஹமட் நபி, மகேஷ் தீக்‌ஷன, 10. குல்தீப் யாதவ்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

1. பாபர் அஸாம், 2. ஷுப்மன் கில், 3. விராட் கோலி, 4. றோஹித் ஷர்மா, 5. டரைல் மிற்செல், 6. டேவிட் வோர்னர், ஹரி டெக்டர், 8. டேவிட் மலன், 9. றஸி வான் டர் டுஸன், 10. ஹென்றிச் கிளாசென்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

1. ஷகிப் அல் ஹஸன், 2. மொஹமட் நபி, 3. சிகண்டர் ராசா, 4. ரஷீட் கான், 5. அசாட் வலா.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X